71ஆவது சுதந்திர தின விழா

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 71ஆவது சுதந்திரதின விழா கடந்த 15.08.2017 அன்று சிறப்பாககொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க தலைவர் A. அஸ்கர் ஹுசைன் M.B.A., முன்னிலை வகித்தார்.

முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க செயலாளரும் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான A.R.அஹமதுல்லாஹ் B.Sc., C.Meteo., அவர்கள் கொடியேற்றி விழா சிறப்புரை ஆற்றினார். மேலும், சங்கத்தின் இணை செயலாளர்     கவிஞர் A.M முஹிபுல்லா அவர்களும், செயற்குழு உறுப்பினர்  S.ஜாபர் அலி B.Sc., அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

  விழாவில் மாணவர்களின் கண் கவர் அணிவகுப்பு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியஆசிரியைகள், மாணவமாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் சங்கத்தின் பொருளாளர் M.Z. முஹம்மது எஹ்யா B.Sc (Agri)., அவர்கள் நன்றியுரை ஆற்றினார். 

சுதந்திர தினத்தின் மற்றொரு சிறப்பு நிகழ்வாக பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்  லால்பேட்டை பசுமை புரட்சி – 2022   சார்பில் தொடங்கப்பட்டது.

தகவல் தொடர்பு அலுவலர்,

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

லால்பேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *