மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம்

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம் 28-02-2018 (புதன்கிழமை) அன்று காலை முதல் மாலை வரை நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும், முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்க செயலாளருமான A.R. அஹமதுல்லா தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரேடியன் ஐஏஸ் அகடமியின் இயக்குனர் ரஹமத்துல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை நல்கினார்கள். 3 அமர்வுகளாக நடைப்பெற்ற இக்கருத்தரங்கில், முதல் இரு அமர்வுகளும் பெற்றோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்றது.

***முதல் அமர்வாக 8 & 9 வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும்,

***இரண்டாவது அமர்வில் 6 & 7 வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும்,

***மூன்றாவது அமர்வில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு மாணவ – மாணவியர்களுக்கு பொது தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறப்பு கருத்தரங்கம் PowerPoint வாயிலாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *